குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கான ஐந்தாவது ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடானது கத்தாரில் "திறனில் இருந்து செழிப்பினை உருவாக்குதல்" என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
உலக நாடுகளின் தலைவர்கள் ‘தோஹா அரசியல் பிரகடனத்தை’ ஏற்றுக் கொண்டதுடன் இந்த மாநாடானது நிறைவுற்றது.
இது மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள 46 உலக நாடுகளை நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDG) அடைவதற்கான பாதையில் மீண்டும் நிலை பெறச் செய்வதற்கான 10 ஆண்டு திட்டமாகும்.
2011 ஆம் ஆண்டில் குறைவான வளர்ச்சிப் பெற்ற நாடுகளில் 5 சதவீதமாக இருந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான செலவினங்கள் கடந்த பத்தாண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.