TNPSC Thervupettagam

த்வைட்ஸ் பனிப்பாறை உருகுதல்

February 17 , 2020 1616 days 678 0
  • ஒரு புதிய ஆய்வானது த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அடியில் ஒரு முக்கிய இடத்தில் வெதுவெதுப்பான நீர் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த வெதுவெதுப்பான நீரானது த்வைட்ஸ் பனிப்பாறை உருகுதலுக்குக் காரணமாக இருக்கின்றது.
  • இந்த ஆய்வானது பனிப்பாறையின் தரைமட்ட மண்டலத்தில் நீரின் வெப்ப நிலையானது நீரின் உறைநிலையை விட இரண்டு டிகிரி அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

த்வைட்ஸ் பனிப்பாறை

  • த்வைட்ஸ் பனிப்பாறையானது 120 கி.மீ அகலத்துடன் வேகமாக நகரும் பனிப் பாறையாகும். இது அண்டார்டிகாவில் அமைந்துள்ளது.
  • இதன் உருகுதலானது ஒவ்வொரு ஆண்டும் 4% உலகளாவிய கடல் மட்ட உயர்விற்குக் காரணமாக இருக்கின்றது.
  • த்வைட்ஸ் பெரும்பாலும் “டூம்ஸ்டே பனிப்பாறை” என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்