பசுமைக் குறியீடு மற்றும் பிற சுற்றுச்சூழல் அளவீடுகளின் அடிப்படையில் நகரங்களைத் தமிழக அரசு தரவரிசைப்படுத்த உள்ளது.
இதன் முக்கிய நோக்கம் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கையாள்வது ஆகும்.
இது நகரங்களின் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவும், அதற்கு பயனுள்ளக் கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.
இந்தத் தரவரிசையானது சிறந்த அளவு மற்றும் தரமான குறிகாட்டிகளின் அடிப்படையில் இருக்கும்.
இது ஒரு நகரத்தின் தற்போதையச் சுற்றுச்சூழல் செயல்திறனையும் எதிர்காலத்தில் அதனை மேம்படுத்துவதற்கான நோக்கங்களையும் குறிக்கிறது.
இந்தத் தரவரிசையில் அதிக மதிப்பெண் பெறும் ஒரு நகரம், அந்த ஆண்டிற்கான கால நிலைத் தூதராக அங்கீகரிக்கப் படுகிறது.
நகர்ப்புற மக்கள் தொகையானது 2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 30.6% அதிகரித்து உள்ளது.