www.aaina.gov.in எனும் இணைய தளத்தின் ‘நகரங்களுக்கான AAINA முகப்புப் பக்கம்’ ஆனது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் (MoHUA) இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) ஆனது, தங்கள் முக்கியத் தரவுகளை இந்த இணைய தளத்தில் உள்ள எளிய தரவு உள்ளீட்டு படிவத்தின் மூலம் தொடர்ச்சியாக சமர்ப்பிக்க இயலும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய செயல்திறன் அளவீடுகளின் வலுவான தரவுத் தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அனைத்து பங்குதாரர்களாலும் அணுகப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளதோடு, அது போதுமான தரவுகளைப் பெற்றவுடன் பொதுமக்கள் அதை காணும் வகையில் மாற்றம் செய்யப்படும்.