நகரமயமாக்கல் ஆனது 140க்கும் மேற்பட்ட முக்கிய இந்திய நகரங்களில் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்கள் அல்லாத பகுதிகளுடன் ஒப்பிடும்போது சுமார் 60 சதவீதம் அதிக இரவு நேர வெப்பமயமாதலுக்கு வழிவகுத்துள்ளது.
நகர்ப்புற வெப்ப தீவு (UHI) விளைவுக்கு நகரமயமாக்கல் காரணமாக இருப்பதாக அறியப் படுகிறது.
கற்காரை (கான்கிரீட்) மற்றும் கருங்காரை (சாலைகள் மற்றும் நடைபாதை) மேற் பரப்புகள் பகலில் வெப்பத்தைச் சேமித்து மாலையில் வெளியிடுவதால், அது இரவு நேர வெப்பநிலையை உயர்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள இந்த நகரங்களின் சராசரி நகர்ப்புற வெப்ப விளைவு கடந்த பத்தாண்டுகளில் 0.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக கண்டறியப்பட்டது.
இது மொத்த நகர்ப்புற வெப்பமயமாதலில் 37.73 சதவீதம் ஆனது நகரமயமாக்கலுடன் தொடர்பு கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவின் மக்கள்தொகையில் 36 சதவீதம், அதாவது சுமார் 40 கோடி பேர் நகர்ப்புறத்தில் உள்ளனர் என்ற நிலையில் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் இரு மடங்காகி 80 கோடியாக உயரும்.