நகரம் மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்து
May 6 , 2024 202 days 253 0
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் (TTCP) சட்டம் ஆனது, எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கைப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாத மண்டலம் என்று அறிவிப்பதன் மூலம் தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் அசையாச் சொத்துக்களில் கட்டிடங்கள் எதுவும் கட்டுவதைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியைப் பராமரித்தல் போன்ற எந்தவொரு பொது நோக்கத்திற்காகவும் அத்தகைய நிலங்களை அரசு கையகப்படுத்த மட்டுமே முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த நிலங்களில் வேளாண்மை மட்டுமே செய்ய வேண்டும் என்று அரசு நில உரிமையாளர்களை வற்புறுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து 19(1)(f) பிரிவு நீக்கப்பட்டதால் சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இல்லை என்றாலும், 300A என்ற பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையானது (சட்டத்தின் அதிகாரத்தால் தவிர வேறு வகையில் எந்த நபரின் சொத்தையும் பறிக்க முடியாது) மனித உரிமையாகவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.