TNPSC Thervupettagam

நகராட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு

January 22 , 2022 1042 days 528 0
  • சென்னை மேயர் பதவியை, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
  • தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை முறையே பட்டியலினச்  சாதியினர் (பெண்கள்) மற்றும்  பட்டியலினச் சாதியினர் (பொதுப் பிரிவு) ஆகிய பிரிவுகளுக்கு ஒதுக்கியுள்ளது.
  • இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு "மறைமுக தேர்தல்" நடைபெற இருக்கையில், ​​சென்னை மாநகராட்சியின் மேயராக பட்டியலினச் சாதியினர்  சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
  • மாநிலத் தலைநகரை சுற்றியுள்ள மூன்று மாநகராட்சிகளும் பட்டியலினச் சாதியினர் சமூகத்தின் உறுப்பினர்களால் (அவர்களிலும் இரண்டு  பேர் பெண்கள்) நிர்வகிக்கப் படும்.
  • கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய ஒன்பது மாநகராட்சிகளின்  மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கப் பட்டுள்ளன.
  • மேலும் தமிழக மாநில அரசானது 10 நகராட்சிகளின் தலைவர் பதவியைப் பட்டியலின சாதியினரின் சமூகம் சார்ந்த (பொதுப் பிரிவு) வேட்பாளர்களுக்கும், 10 நகராட்சிகளின் தலைவர் பதவியைப் பட்டியலினச் சாதியினரின் சமூகம் சார்ந்த பெண்களுக்கும், ஒரு நகராட்சியைப் பட்டியலினப் பழங்குடியினர் சமூகம் சார்ந்த பெண்ணுக்கும், மற்ற 58 பகுதிகளை பொதுப் பிரிவு  பெண்களுக்கும்  ஒதுக்கியுள்ளது.
  • மேலும், நகரப் பஞ்சாயத்துகளில் 288 தலைவர் பதவிகளுக்கான இடங்களில் - இரண்டு  பட்டியலினப் பழங்குடியினர் சமூகம் (பெண்கள்), ஒன்று பட்டியலினப் பழங்குடியினர் சமூகம் (பொதுப் பிரிவு), 43 பட்டியலினச் சாதியினர் (பெண்கள்), 42 பட்டியலினச் சாதியினர் சமூகம் (பொதுப் பிரிவு), மற்றும் 200 பொதுப் பிரிவு பெண்கள் என்ற கணக்கில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்