நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கும் வரம்புகள் திருத்தம்
March 18 , 2020 1717 days 509 0
இந்திய ரிசர்வ் வங்கியானது நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கும் வரம்புகளை திருத்தி அமைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியானது நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் மூலதன நிதியில் 15% நிதியை தனிநபருக்கும் 40% நிதியை குழுக்களுக்கும் என்ற அளவில் கடன் வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
இது தற்பொழுது கடன் வாங்கும் குழுவின் நிதி வரம்பை அதன் நிதியில் 25% ஆக மாற்றியுள்ளது.
கடன் வழங்கும் வரம்பு என்பது ஒரு வங்கி தன்னிடம் கடன் வாங்குபவர்களுக்காக வைத்துள்ள அதிகபட்ச கடன் அளவு வரம்பாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் (priority sector lending - PSL) வழங்கும் இலக்கை 40% என்ற அளவிலிருந்து 75% ஆகத் திருத்தியுள்ளது.
விவசாயம், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், குறைந்த வருமானம் கொண்ட குழுக்கள், ஏழை மக்களுக்கான வீட்டுவசதி, கல்விக் கடன்கள், நலிந்த பிரிவினருக்கான கடன்கள் ஆகியவை முன்னுரிமைத் துறைகளில் அடங்கும்.