நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான முக்கிய நடவடிக்கைகள்
June 17 , 2023 526 days 276 0
முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீட்டு இலக்குகளை அடைவதற்காக என்று மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவதற்காக இந்த நான்கு முக்கிய நடவடிக்கைகளானது மேற்கொள்ளப் பட்டுள்ளன.
நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் தற்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி எதுவுமின்றிப் புதிய கிளைகளை (அதிகபட்சம் 5 கிளைகள்) தொடங்கலாம்.
வணிக வங்கிகளுக்கு இணையாக நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளும் ஒற்றை வரம்பில் கடனைத் திரும்பி செலுத்துதல் முறையினை மேற்கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்காக ஒரு தலைமை அதிகாரியை நியமிக்க உள்ளதாகவும் அறிவித்தது.