TNPSC Thervupettagam

நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான முக்கிய நடவடிக்கைகள்

June 17 , 2023 398 days 216 0
  • முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீட்டு இலக்குகளை அடைவதற்காக என்று மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளிட்ட நான்கு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவதற்காக இந்த நான்கு முக்கிய நடவடிக்கைகளானது மேற்கொள்ளப் பட்டுள்ளன.
  • நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் தற்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி எதுவுமின்றிப் புதிய கிளைகளை (அதிகபட்சம் 5 கிளைகள்) தொடங்கலாம்.
  • வணிக வங்கிகளுக்கு இணையாக நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளும் ஒற்றை வரம்பில் கடனைத் திரும்பி செலுத்துதல் முறையினை மேற்கொள்ளலாம்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்காக ஒரு தலைமை அதிகாரியை நியமிக்க உள்ளதாகவும்  அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்