தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (NIUA) ஆனது, U20 ஈடுபாட்டு நிகழ்வுகளின் கீழான, CITIIS திட்டத்தின் மூலம் முதலாவது நகர்ப்புறப் பருவநிலைத் திரை விழாவை ஏற்பாடு செய்கிறது.
9 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 திரைப்படங்கள் இந்த விழாவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் படங்கள் புது டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த மாதங்களில் நடைபெறும் விழாக்களில் திரையிடப் படும்.
இவை நகரங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றிய பரந்த விழிப்புணர்வை உருவாக்குவதையும், நிலையான நகர்ப்புற மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் பொதுமக்களை ஈடுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.