TNPSC Thervupettagam

நகர்ப்புறப் போக்குவரத்து பற்றிய அறிக்கை

October 22 , 2023 399 days 273 0
  • 'விரைவான, மெதுவான மற்றும் நெரிசல் மிக்க: செல்வ வளம் மிக்க மற்றும் ஏழ்மை நாடுகளில் நகர்ப்புறப் போக்குவரத்து' என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • நகரங்களில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் சராசரி பயண வேகத்தை இது மதிப்பிட்டது.
  • ஃப்லிண்ட் நகரத்தில் (அமெரிக்கா) நாள் முழுவதும் அதிகபட்ச சராசரி வேகம் பதிவாகி உள்ளது.
  • வங்காளதேச தலைநகரான டாக்கா, குறைவான சராசரி பயண வேகத்தைக் கொண்ட நகராக உள்ளது.
  • பொகோட்டா (கொலம்பியா) நெரிசல் மிக்க நகரமாகக் கண்டறியப் பட்டுள்ளது.
  • மெதுவான நெரிசலற்ற பயண வேகம் கொண்ட பத்து நகரங்களில் ஒன்பது நகரங்கள் வங்காளதேசம், இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன என்பதை அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • வேகக் குறியீட்டின் அடிப்படையில் உலகின் 20 மெதுவான பயண வேகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிவாண்டி 5வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • கொல்கத்தா 6வது இடத்தையும், பீகாரில் உள்ள அர்ரா 7வது இடத்தினையும் பெற்று உள்ளன.
  • போக்குவரத்து நெரிசல் அளவீடுகளில், பெங்களூரு 8வது இடத்திலும், மும்பை 13வது இடத்திலும், டெல்லி 20வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்