நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த CAG அறிக்கை
November 23 , 2024 2 days 49 0
74வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஆனது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிமக்களுக்கு நேரடியாகவும் திறம்படவும் சேவைகளை வழங்க முடியும் என்பதால் அவற்றிற்கான அதிகாரப் பகிர்வைக் கட்டாயமாக்கியது.
பாராளுமன்றமானது அரசியலமைப்புச் சட்டத்தினைத் திருத்தியமைத்த சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், 18 மாநில அரசுகள் இதனை முழுமையாகச் செயல்படுத்த வில்லை.
18 நகராட்சி செயல்பாடுகளில் 17 செயல்பாடுகள் ஆனது அரசியல் சட்டப்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULSGs) மாற்றப்பட்டுள்ளன.
ஆனால் நான்கு செயல்பாடுகள் மட்டுமே முழுமையான ஒரு சுயாட்சியுடன் திறம்பட வழங்கப் பட்டுள்ளன.
14 மாநிலங்களில் சுமார் பத்து மாநிலங்கள் ஆனது, 16 காரணிகளுள் ஐந்திற்கும் மேற்பட்டவை தொடர்பாக ULSG அமைப்புகளின் மீது மேலாதிக்க அதிகாரங்களைக் கொண்டுள்ளன.
17 மாநிலங்களில் உள்ள சுமார் 2,625 ULSG அமைப்புகளில் 1,600 அமைப்புகளில் செயல் பாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகள் இல்லை, மேலும் ஐந்து அமைப்புகளில் மட்டுமே மேயர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
14 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் தங்கள் நகர சபை இடங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டினை வழங்கியுள்ள நிலையில் இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள 33% இடஒதுக்கீடு வரம்பினை விஞ்சுகிறது.
15 மாநிலங்களில் சுமார் நான்கு மாநிலங்கள் மட்டுமே தங்கள் மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு (SEC) வட்டார (பிரிவு) மறுசீரமைப்பிற்கு அதிகாரம் அளித்துள்ளன.
நகராட்சி அமைப்புகள் ஆனது, நிதிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளை பெரிதும் சார்ந்துள்ளது.
சராசரியாக, ULSG அமைப்புகளின் மொத்த வருவாயில் சுமார் 32% மட்டுமே அவற்றின் சொந்த வருவாயாக இருந்தது.
அவற்றின் செலவினத்தில் சுமார் 29% மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.
அவற்றின் சராசரி வருவாய் ஆதார- செலவின இடைவெளியானது 42% ஆகும்.
சுமார் பத்து மாநிலங்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவின்படி மாநில நிதி ஆணையங்களை அமைத்துள்ளன.