TNPSC Thervupettagam

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்: 2023 ஆம் ஆண்டிற்கான ASICS அறிக்கை

October 23 , 2023 272 days 183 0
  • இந்தியாவின் நகர அமைப்புகளின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASICS) என்பது இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகரங்களின் நிர்வாகத்தரம் பற்றிய ஒரு விரிவான மதிப்பீடாகும்.
  • இது ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது (கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது).
  • கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல நகரங்களை வரிசைப் படுத்தச் செய்வதற்குப் பதிலாக இம்முறை மாநிலத்தை ஒரு தொகுதியாக கொண்டு மையப் படுத்தப் பட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
  • நகராட்சியின் செலவினங்களில் சுமார் 20% மட்டுமே சொத்து வரியால் ஈடு செய்யப் படுகிற நிலையில், இது வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு செயல்திறன் நடவடிக்கைகளின் அவசியத்தைப் பரிந்துரைக்கிறது.
  • பொதுத் தளத்தில் அணுகக்கூடிய வகையில் நகர்ப்புறச் சட்டங்களானது 51% மாநிலங்கள் /ஒன்றியப் பிரதேசங்களில் காணப்படவில்லை.
  • அதன் செயல்பாடுகளில் நீண்டகாலத் தேவைகளுக்காக செயல்படுத்தும் முதன்மைத் திட்டங்களானது 39% அளவிற்கு இந்தியாவின் தலைநகர நகரங்களில் காணப்பட வில்லை.
  • கிழக்கு மாநிலங்களிலும் அதைத் தொடர்ந்து தெற்கு மாநிலங்களிலும் சிறந்த நகர்ப்புற சட்டங்களானது காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்