நகர்ப்புற மேம்பாடு; தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஆளுகைச் சவால்கள்
May 1 , 2018 2403 days 722 0
நகர்ப்புற மேம்பாடு; தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஆளுகைச் சவால்கள் (Urban Development: Technological Solutions and Governance Challenges) மீதான இருநாள் பிராந்திய மாநாடு அண்மையில் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் நடைபெற்றது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (Information System for Developing Countries -RIS), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank - AIIB), ASSOCHAM ஆகியவற்றுடன் கூட்டிணைந்து மத்திய நிதி அமைச்சகம் இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
இம்மாநாடானது மும்பையில் 2018-ஆம் ஆண்டு ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆசிய முதலீட்டு வங்கியின் 3-வது வருடாந்திர சந்திப்பிற்கான 3-வது வழிநடத்து (lead-up event) நிகழ்ச்சியாகும்.
இந்த மூன்றாவது மாநாட்டிற்கு முன்பு, இதன் இரு பிராந்திய மாநாடுகளானது கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்பு (Mass Rapid Transport Systems) எனும் கருப்பொருளில் கொல்கத்தாவிலும், துறைமுகம் மற்றும் கடலோர உள்கட்டமைப்பு (Port and Coastal Infrastructure) எனும் கருப்பொருளில் விசாகப்பட்டினத்திலும் முறையே முதல் மற்றும் இரண்டாம் பிராந்திய மாநாடுகள் நடத்தப்பட்டன.
மொத்தமாக இதுவரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இது போன்று எட்டு பிராந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளன.