வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனானது ஓர் குப்பைக் கொட்டும் மைதானத்தை மரங்களின் அருங்காட்சியகமாக (Museum of trees) மாற்றியுள்ளது.
வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனானது வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள வடாசர் எனும் பகுதியில் உள்ள நிலகுப்பைக் குழியில் குப்பைகளை குவிப்பதை 2016 அக்டோபரில் நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக 50,000 சதுர மீட்டர் பரப்பில் 100 வகைகளில் 12,663 மரக்கன்றுகளை நட்டுள்ளது. நடப்பட்ட அனைத்துக் கன்றுகளும் உயிர் வாழ்கின்றன.
இந்த இடத்திற்கு “நகர்ப்புற வனம் மரங்களின் அருங்காட்சியகம்” (Urban forest - museum of trees) எனப் பெயரிடப்பட்டுள்ளது.