தெற்கு கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே பழைய கிஜாபே அணை சமீபத்தில் உடைந்தது.
இது கென்யாவின் முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் மேற் கொள்ளப் பட்ட இரயில்வே கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு பல தசாப்தங்களாக இயற்கையாக உருவான மலையோரத் அணை அமைப்பாகும்.
அண்டை நாடுகளான தான்சானியா மற்றும் புருண்டியுடன் சேர்ந்து கென்யாவும் சமீபத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குப்பைகள், கற்கள் மற்றும் மண் ஆகியவற்றினை படியச் செய்துள்ளது.
இதனால் கால்வாய் அடைக்கப் பட்டு இறுதியில் அணை உடைந்தது.
கடந்த ஆண்டின் இறுதியில், கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, சமீபத்திய எல் நினோ இதுவரை பதிவாகிய ஐந்தாவது வலிமையான ஒன்றாகும்.