TNPSC Thervupettagam

நகோயா நெறிமுறை - கேமரூன்

February 11 , 2024 159 days 222 0
  • மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாடு ஆனது தற்போது அணுகல் மற்றும் பயன் பகிர்வுக்கான நகோயா நெறிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது மரபணு வளங்கள் மற்றும் பாரம்பரியத் தகவல்களைப் பயன்படுத்துவதன் பலன்கள் நியாயமான மற்றும் சமமான முறையில் பகிர்ந்து கொள்ளப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • நகோயா நெறிமுறை என்பது பல்லுயிர்ப் பெருக்கத்தின் அணுகலில் நியாயமான மற்றும் சமமான பலன் பகிர்வைப் பூர்த்தி செய்கின்ற உயிரியல் பன்முகத்தன்மை மீதான உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • ஒரு பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதியாக உள்ள கேமரூன் நாடானது, இங்கு 11,000 தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் இனங்கள் உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • நகோயா நெறிமுறையானது ஜப்பானின் நகோயா நகரில் உயிரியல் பன்முகத் தன்மை மீதான உடன்படிக்கையின் மூலம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, 2014 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்