TNPSC Thervupettagam

நக்பா நிகழ்வின் 75வது ஆண்டு நிறைவு

May 20 , 2023 557 days 280 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது, நக்பா நிகழ்வின் 75வது ஆண்டு நிறைவு விழாவினை நினைவு கூரும் வகையில் உயர்மட்டச் சிறப்புக் கூட்டத்தினை நடத்தவுள்ளது.
  • “பேரழிவு” என்பதற்கான அரபு மொழிச் சொல்லான நக்பா என்ற சொல், சுமார் 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்திலிருந்துப் பெருமளவில் இடம் பெயர்ந்ததனைக் குறிக்கிறது.
  • 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று, இஸ்ரேல் நாடு தனது சுதந்திரத்தை அறிவித்த நேரத்தில், சுமார் 250,000 முதல் 350,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
  • அந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளான மே 15  ஆம் தேதியன்று நக்பா தினம் என்று அறியப் பட்டது.
  • ஒரு சர்வதேச அமைப்பு இத்தினத்தினை நினைவு கூர்வது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்