TNPSC Thervupettagam

நஞ்சு முறிப்பு யுக்தி

May 27 , 2019 1915 days 649 0
  • உலக சுகாதார நிறுவனம் பாம்புக் கடியினால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைத்திட ஒரு புதிய யுக்தியை வெளியிட்டு இருக்கின்றது.
  • விஷமுறிவு மருந்துகளின் பற்றாக்குறையானது ஒரு உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையை விரைவில் உருவாக்கும் என்று இது எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் பாம்புக் கடியின் நஞ்சுப் பாதிப்பை ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக வரையறுத்து இருக்கின்றது.
  • அந்நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள்ளாக தகுதியான மருந்து உற்பத்தியாளர்களில் 25 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் சிகிச்சை
  • பல எதிர்ப்புத் தன்மை கொண்ட பாம்பு விஷமெதிர்ப்பு ஊசியானது இந்தியாவில் பாம்புக் கடிகளுக்கான முக்கிய சிசிச்சையாகும்.
  • இது நான்கு பொதுவான உயிரினங்களான கண்ணாடி விரியன், சாதாரண நாகம், சாதாரண கட்டு விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய அனைத்திற்கும் எதிராக செயல்திறன் உடையதாகும்.
  • இந்தியாவில் இருக்கும் ஆறு மிக நஞ்சுடைய பாம்புகளாவன :
    • இந்திய நாகம்
    • ராஜ நாகம்
    • இந்திய குழிவிரியன்
    • கோரிவாலா எனப்படும் கண்ணாடி விரியன்
    • சுருட்டை விரியன்
    • இந்திய விரியன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்