இந்திய ரிசர்வ் வங்கியானது 2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவிகிதம் அல்லது 57.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதியின் காரணமாக ஏற்பட்ட அதிக வர்த்தகப் - பற்றாக்குறையினால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது 2018 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவிகிதம் அல்லது 48.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.