டெல்லி முதலமைச்சர் நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து வைத்து தன்னார்வலர்களின் நடமாடும் மருத்துவ சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டத்தின் முக்கிய பங்காக நடமாடும் மருத்துவ வாகனம் இருக்கும். இந்த வாகனம் ஓக்லாவில் வசிக்கும் சமூகத்தினரை இலக்காகக் கொண்டுள்ள மருத்துவ முகாம்களோடு ஒருங்கிணைக்கப்படும்.
இந்த வாகனம் ஆய்ந்தறிதல், சோதனைச் சாலை, மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் முதலுதவி சிகிச்சை ஆகிய அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மேம்படுத்தப் பட்டிருக்கும்.
இந்த திட்டம் வாழ்வியல் நோய்களான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை முன்கூட்டியே கணிப்பதற்கு உதவுவதோடு, தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்புக் கவனத்தோடு பொது மக்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்பூட்ட உதவும்.