நடிகர் திலீப்குமார் காலமானார்
July 9 , 2021
1113 days
475
- பிரபல பாலிவுட் நடிகர் முகமது யூசூஃப் கான் தனது 98வது வயதில் காலமானார்.
- திரையுலகில் இவர் திலீப் குமார் என அறியப்படுகிறார்.
- இவர் பாலிவுட்டின் டிராஜடி கிங் (tragedy king of Bollywood) எனவும் பிரபலமாக அறியப் படுகிறார்.
- இவரது கடைசி திரைப்படம் 1998 ஆம் ஆண்டில் வெளியான கிலா என்பதாகும்.
- சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினைப் பெற்ற (1954) முதல் நடிகர் இவரே ஆவார்.
- இவர் எட்டு முறை இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
- திலீப் குமார் அதிகபட்ச விருதுகளை வென்ற இந்திய நடிகராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவராவார்.
- இந்தியாவின் முதல் “method actor” எனவும் இவர் குறிப்பிடப் படுகிறார்.
- இவருக்கு 1994 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதும் 2015 ஆம் ஆண்டில் பத்ம விபூசன் விருதும் வழங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-74.jpg)
Post Views:
475