நடுத்தர வருமான நாடு சிக்கல் குறித்த உலக வங்கியின் மதிப்பீடு
August 9 , 2024 106 days 139 0
உலக வங்கியானது, ‘உலக மேம்பாட்டு அறிக்கை 2024: நடுத்தர வருமான நாடுகளின் சிக்கல் குறித்த மதிப்பீடுகள்’ என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
'நடுத்தர வருமான நாட்டுச் சிக்கல்’ என்பது, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தினை அல்லது நடுத்தர வரம்பில், இன்றைய நிலவரப்படி 8,000 டாலருக்கு சமமான நிலையை எட்டும் போது ஏற்படும் ஒரு "சிக்கல் நிலையை" எதிர்கொள்ளும் நாடுகள் என விவரிக்கப் படுகிறது.
அடுத்த சில தசாப்தங்களில் அதிக வருமானம் கொண்ட நாடுகளாக மாறுவதில் "கடுமையான தடைகளை" எதிர்கொள்ளும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது.
அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கினை அடைய இந்தியா சுமார் 75 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.
சீனா இந்த சாதனை நிலையினை அடைய 10 ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில் இந்தோனேசியா இந்நிலையினை அடைய 70 ஆண்டுகள் ஆகும்.
2023 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்தம் ஆறு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட 108 நாடுகள் (உலகில் 75 சதவீதம்) ‘நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை ஒவ்வொன்றும் 1,136-13,845 டாலர் என்ற வரம்பிற்கு இடைப்பட்ட மூல தனத்திற்கான வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருந்தன என்பதோடு மேலும் மூன்றில் இரு நபர்கள் இன்னும் வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு முதல், 34 நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளால் மட்டுமே உயர் வருமான நிலைக்கு மாற முடிந்தது.