நடுநிலை அடர்த்தி கொண்ட வடிவமற்ற பனிக்கட்டி
February 14 , 2023
653 days
337
- நீரின் மற்ற வடிவங்களை விட பெருமளவில் திரவ நீரை ஒத்திருக்கும் புதிய பனி வடிவத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- பனிக்கட்டியின் இந்தப் புதிய வடிவம் ஆனது உருவமற்றதாகும்.
- சாதாரண படிக வடிவிலான பனியில், மூலக்கூறுகள் ஒரு முறையான வடிவத்தில் தானே சீரமைத்துக் கொள்கின்றன.
- ஆனால் உருவமற்ற பனியில், மூலக்கூறுகள் ஒரு திரவத்தை ஒத்தவாறு ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் உள்ளன.
- இதற்கு பனிக்கட்டி என்று பெயரிடப்பட்டாலும், அதன் மூலக்கூறு அமைப்பு தண்ணீரின் சீரமைப்பினை ஒத்துள்ளது.
- உருவமற்றது (அமார்ஃபஸ்) என்றால் தெளிவான வடிவம் அற்றது என்று பொருளாகும்.
- இது நீரோ அல்லது பனியோ அல்ல, எனவே இது வடிவமற்ற பனிக்கட்டி எனப்படுகிறது.
- வெப்பமடைந்து மீண்டும் படிகமாக்கப் படும் போது, இந்த வடிவமற்ற பனிக் கட்டி அசாதாரண அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது.
- அப்போது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல் ஆனது மிக அதிகமாக இருப்பதால் அது பனி நிலநடுக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
- சனி மற்றும் வியாழன் போன்ற கோள்களில் பனி நிலநடுக்கம் மிகவும் சாதாரணமாக ஏற்படுகிறது.
Post Views:
337