நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான (திருத்த) மசோதா 2018
August 14 , 2018 2300 days 832 0
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வணிக சிக்கல்களுக்குத் தீர்வு காண வகை செய்யும் வகையில் நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான (திருத்த) மசோதா - 2018 ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
இது உள்நாட்டு மற்றும் சர்வதேச தீர்ப்புகளை சமாளிக்க விதிகள் மற்றும் வரையறைகளையும் சமரச நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்டம் 1996 ஐ திருத்துகிறது.
இந்த மசோதா இந்திய நடுவர் தீர்ப்பாயக் குழு (ACI- Arbitration Council of India) எனும் சுதந்திரமான அமைப்பை நடுநிலைத் தீர்ப்பு, சமரசம் மற்றும் பிற மாற்று வழியில் சர்ச்சைகளை சரி செய்தல் போன்றவற்றை ஊக்குவிக்க நிறுவியுள்ளது.
இந்த அமைப்பு உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது நடுவர் சார்ந்த நடத்தை பற்றி அறிவு கொண்ட நபரைத் தலைவராகக் கொண்டிருக்கும்.
இந்த மசோதா முன்னதாக அனைத்து சர்வதேச வர்த்தகத்திற்கான நடுவர் தீர்ப்பாயம் கொண்டுள்ள 12 மாத காலக்கெடுவை நீக்குவதையும் முன்மொழிந்துள்ளது.