TNPSC Thervupettagam

நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான (திருத்த) மசோதா 2018

August 14 , 2018 2170 days 766 0
  • இந்தியாவில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வணிக சிக்கல்களுக்குத் தீர்வு காண வகை செய்யும் வகையில் நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான (திருத்த) மசோதா - 2018 ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இது உள்நாட்டு மற்றும் சர்வதேச தீர்ப்புகளை சமாளிக்க விதிகள் மற்றும் வரையறைகளையும் சமரச நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உடன்பாடு செய்தலுக்கான சட்டம் 1996 ஐ திருத்துகிறது.
  • இந்த மசோதா இந்திய நடுவர் தீர்ப்பாயக் குழு (ACI- Arbitration Council of India) எனும் சுதந்திரமான அமைப்பை நடுநிலைத் தீர்ப்பு, சமரசம் மற்றும் பிற மாற்று வழியில் சர்ச்சைகளை சரி செய்தல் போன்றவற்றை ஊக்குவிக்க நிறுவியுள்ளது.
  • இந்த அமைப்பு உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது நடுவர் சார்ந்த நடத்தை பற்றி அறிவு கொண்ட நபரைத் தலைவராகக் கொண்டிருக்கும்.
  • இந்த மசோதா முன்னதாக அனைத்து சர்வதேச வர்த்தகத்திற்கான நடுவர் தீர்ப்பாயம் கொண்டுள்ள 12 மாத காலக்கெடுவை நீக்குவதையும் முன்மொழிந்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்