நட்சத்திர (*) சின்னத்துடன் கூடிய 500 ரூபாய் தாள்கள் என்பது மற்ற சட்டப்பூர்வ ரூபாய் தாள்களைப் போன்றது மற்றும் அசல் தன்மை கொண்டது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதிப் படுத்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய 500 ரூபாய் தாள்களில் நட்சத்திரக் குறியீடு (*) அறிமுகப்படுத்தப் பட்டது.
நட்சத்திரக் குறியீடு என்பது மாற்றப்பட்ட/மறு அச்சிடப்பட்ட ரூபாய் தாள் என்பதை அடையாளங் காட்டும் குறியீடாகும்.
இது 2016 ஆம் ஆண்டிற்கு முன்பே 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் தாள்களில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்த ரூபாய் தாள்கள், அச்சிடல் செயல்பாட்டின் போது பழுதுபடும் ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.