TNPSC Thervupettagam

நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டம் அறிமுகம் – BEE

March 3 , 2020 1636 days 608 0
  • எரிசக்தித் திறன் அமைப்பானது (Bureau of Energy Efficiency - BEE), சமீபத்திய நிகழ்வின் போது ஆழ்உறைப் பெட்டகம் மற்றும் இலகு ரக வணிக ரீதியிலான குளிர்சாதனப் பெட்டிகளுக்கான (Light Commercial Air Conditioners - LCAC) நட்சத்திர மதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • எரிசக்தி பாதுகாப்புச் சட்டம், 2001ன் கீழ், நட்சத்திரக் குறியீட்டுத் திட்டமானது, அதன் விதிமுறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • நட்சத்திர மதிப்பீடானது ஒரு சாதனத்தின் ஆற்றல் செயல்திறனை வழங்குகின்றது. அதிக நட்சத்திர மதிப்பீடானது குறைவாக நுகரப்படும் ஆற்றலைக் குறிக்கின்றது.
  • இந்த நிகழ்வின் போது உலக வள நிறுவனத்துடன் (WRI - World Resources Institute) இணைந்து BEE ஆல் எடுக்கப்பட்ட முதலாவது முயற்சியான உர்ஜா தக்சதா தகவல் கருவியானது (Urja Dakshata Information Tool - UDIT) தொடங்கப் பட்டுள்ளது.

உர்ஜா தக்சதா தகவல் கருவி

  • UDIT என்பது பயனருக்கு உகந்த ஒரு தளமாகும். இது தொழில், உபகரணங்கள், கட்டிடம், போக்குவரத்து, நகராட்சி மற்றும் விவசாயத் துறைகளில் இந்தியாவின் ஆற்றல் திறன் தகவமைப்பை விளக்குகின்றது.
  • UDIT ஆனது பல்வேறு துறைகளில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் ஆகியவற்றைக் காண்பிக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்