சீனா தனது முதல் உயரிய அரசு மரியாதையுடைய நட்பு பதக்கத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அணிவித்துள்ளது.
இந்தப் பதக்கம் தனிப்பட்ட முறையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்புளில் (great hall of the people) நடைபெற்ற விழாவின் போது அணிவிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து சீனா முதல் முறையாக இந்தப் பதக்கத்தை அறிவித்துள்ளது.
உலக அமைதியைப் பாதுகாப்பதிலும், சீனாவிற்கும் உலகத்திற்கும் இடையே பரிமாற்றம் மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்புகளை அளிப்பதிலும் ஈடுபட்ட வெளிநாட்டவருக்கு மட்டுமே இந்த நட்புப் பதக்கம் சீனாவால் வழங்கப்படுகின்றது.