TNPSC Thervupettagam

நட்புப் பதக்கம்

June 12 , 2018 2262 days 620 0
  • சீனா தனது முதல் உயரிய அரசு மரியாதையுடைய நட்பு பதக்கத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அணிவித்துள்ளது.
  • இந்தப் பதக்கம் தனிப்பட்ட முறையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்புளில் (great hall of the people) நடைபெற்ற விழாவின் போது அணிவிக்கப்பட்டது.
  • 2015-ம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து சீனா முதல் முறையாக இந்தப் பதக்கத்தை அறிவித்துள்ளது.
  • உலக அமைதியைப் பாதுகாப்பதிலும், சீனாவிற்கும் உலகத்திற்கும் இடையே பரிமாற்றம் மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்புகளை அளிப்பதிலும் ஈடுபட்ட வெளிநாட்டவருக்கு மட்டுமே இந்த நட்புப் பதக்கம் சீனாவால் வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்