TNPSC Thervupettagam

நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி

April 11 , 2024 99 days 160 0
  • இந்திய நாடானது, தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்துள்ளது.
  • வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்குமாறு அறிவித்த அதே வேளையில் அமீரகத்திற்கு 14,400 டன் வெங்காய ஏற்றுமதியை மேற் கொள்ள அரசாங்கம் முன்னதாக அனுமதித்திருந்தது.
  • இந்தத் தடையானது, முதலில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 08 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டது.
  • வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டாலும், சில நட்பு நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவுகளை ஏற்றுமதி செய்யவும் மற்றும் நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யவும் அரசாங்கம் அனுமதிக்கிறது.
  • 187.5 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி வங்காளதேசத்திற்கும், 48.12 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியானது இலங்கைக்கும் மேற்கொள்ளப்பட்டதுடன் 431.78 மில்லியன் டாலர் மதிப்பிலான வெங்காயம் ஆனது 2024 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் -ஜனவரி மாத காலக் கட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்