முதன்முறையாக, கோடியக்கரைக்கு அருகிலுள்ள வேதாரண்யம் சதுப்பு நிலத்தில் நண்டு திண்ணி பறவை இனத்தின் இனப்பெருக்கப் பகுதிகள் தென்பட்டுள்ளன.
நண்டு திண்ணி பறவைகள் (டிரோமாஸ் அர்டியோலா) பாகிஸ்தான், தீபகற்ப இந்தியா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, வட இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு குளிர்காலத்தில் வருகை தரும் ஒரு பறவையாகும் என்பதோடு இது வங்காளதேசப் பகுதிகளில் சுற்றித் திரியும் பறவையாகும்.
குஞ்சு பொரித்த சிறிது நேரத்திலேயே கூடுகளை விட்டு வெளியேறும் மற்ற கரையோரப் பறவைகளின் குஞ்சுகளைப் போலல்லாமல் இந்தப் பறவைகளின் குஞ்சுகள் பாதி நேரம் கூடுகளிலும் பாதி நேரம் கூடு தங்காத பறவைகளாகும்.
இந்தப் பறவைகள் தனது குஞ்சுகளை ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை பேணிக் காக்கின்றன.