TNPSC Thervupettagam
April 18 , 2019 1929 days 532 0
  • தெற்கு சூடானில் ஐ.நா. திட்டத்திற்குப் (UNMISS - UN Mission in South Sudan) பணியாற்றும் 150 இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு, அவர்களுடைய சேவை மற்றும் தியாகத்திற்காக ஐ.நாவினால் நன்மதிப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • ஐ.நா அமைதிப் பாதுகாப்புத் திட்டத்திற்கு மிக அதிக அளவிலான படைகளை அனுப்பும் நாடுகளில் ஒன்று இந்தியா ஆகும்.
  • தற்போதையத் திட்டத்தில் 2400 இராணுவ மற்றும் காவல் துறை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். UNMISS அமைதிப் படைக்கு வீரர்களை அதிக அளவில் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • UNMISS ஆனது தெற்கு சூடானில் குடிமக்களுக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இது மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்