ஜகன்நாத் கடவுளுக்கான நபாகலேபர் திருவிழாவின் (Nabakalebar festival) போது இந்திய குடியரசுத் தலைவர் 10 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நாணய மதிப்புகளில் (Denominations) நினைவு நாணயங்களை (Commemorative coins) வெளியிட்டுள்ளார்.
நபாகலேபர் திருவிழாவைப் பற்றி
ஜகன்நாத் ஆலயங்களோடு தொடர்புடைய பண்டையச் சடங்கே நபாகலேபர் திருவிழாவாகும். இச்சடங்குகளின் போது ஜகன்நாத் ஆலயங்களில் உள்ள ஜகன்நாத் (Lord Jagannath), பாலாபத்ரா (Balabhadra), சுபத்ரா (Subhadra), சுதர்ஷன் (Sudarshan) ஆகிய கடவுள்களின் சிலைகள் அவற்றினுடைய புது சிலைகள் கொண்டு மாற்றப்படும்.
இந்து நாட்காட்டிப்படி, கூடுதலாக அஷாதா மாதத்தை (Ashadha masa/month) கொண்ட ஆண்டானது இத்திருவிழா நடத்துவதற்கு மங்களகரமான (auspicious) மாதமாகக் கருதப்படும். ஒவ்வொரு 12 முதல் 19 வருடங்களுக்கு இடையிலான காலத்தில் இத்திருவிழா நடைபெறும்.
தாரு பிரம்மா (Daru Bramha) எனும் சிறப்பு வகை வேப்பமரக் கட்டைகளிலிருந்து இத்தெய்வங்கள் செய்யப்படுகின்றன.
இதற்கு முன் இத்திருவிழா 1996-ஆம் ஆண்டைத் தொடர்ந்து 2015-ல் நடைபெற்றது.
ஒடிஸா மாநிலத்தின் பூரியில் உள்ள ஜகன்நாத் கோயிலில் இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.