இஸ்ரோவின் விண்வெளி சார்ந்தப் பயன்பாட்டுச் சாதன ஆய்வு மையம் (அகமதாபாத்) ஆனது மீனவர்களின் பாதுகாப்பிற்காக ‘நப்மித்ரா’ என்ற கருவியினை உருவாக்கி உள்ளது.
செயற்கைக்கோள் சார்ந்த இந்தத் தகவல் தொடர்பு அமைப்பானது கடல் பகுதியில் இருந்தும் கடல் பகுதிக்குள்ளும் ஆகிய இருவழித் தகவல் பகிர்வுச் சேவைகளை மேற் கொள்ள உதவுகிறது.
வானிலை சார்ந்த மற்றும் புயல் எச்சரிக்கைகள் உள்ளூர் மொழியில் தெரிவிக்கப் படுவதோடு, கடற்பரப்பில் படகுகளில் உள்ள போது அந்த அதிகாரிகளுக்குப் பேரிடர் தொடர்பான செய்திகளையும் அனுப்பலாம்.
படகு கவிழ்தல் மற்றும் தீப்பற்றுதல் போன்ற அவசரகால சூழ்நிலைகளில், மீனவர்கள் இந்த சாதனத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்திக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
படகு இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களைக் கட்டுப்பாட்டு மையம் பெறும் போது, படகில் இருக்கும் நபர்களுக்கு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பதில் செய்தி வழங்கப் படும்.