அம்னிஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா (Amnesty International India) என்ற அமைப்பானது ‘நமது பாதுகாப்பு, நமது உரிமைகள்’ என்ற புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம் குழந்தைகளிடையே பாலின பிரச்சனைகள் அடையாளம் காண்பது மற்றும் புரிந்து கொள்வதற்கு உதவுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
அம்னிஸ்டி இண்டர்நேஷனல் இந்திய அமைப்பானது பாரத் கியான் விக்யான் சமிதி, நகர்ப்புற எழுச்சிக்கான மக்கள் இயக்கம் (PARA People; Action for Global Awakening) மற்றும் சமூகக் கல்விக்கான நிறுவனத்துடன் இணைந்து இப்பிரச்சாரத்தை நடத்தவிருக்கிறது.
இப்பிரச்சாரமானது பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினமான அக்டோபர் 11 - அன்று முடிவடையும்.