இது மத்திய ஆயுஷ் துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹேமியோபதி என்பதே ஆயுஷ் என்பதின் விரிவாக்கமாகும்.
சமீபத்தில், இந்த அமைச்சகமானது ஆயுர்வேதம் மற்றும் தரப்படுத்தப்பட்ட ஆயுர்வேத சொல்லாக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களின் விரிவான வகைப்பாடான தேசிய ஆயுர்வேத நோயுற்ற அளவு குறிகள் (NAMC - National Ayurveda Morbidity Codes) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.
தேசிய ஆயுஷ் நோயுற்ற அளவு மற்றும் தரப்படுத்தப்பட்ட சொல்லாக்கல் மின்னணு தளமானது (NAMASTE Portal) 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று (2வது ஆயுர்வேத தினம்) தொடங்கப்பட்டது.
தேசிய ஆயுர்வேத தினமானது ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தியின் போது அனுசரிக்கப் படுகின்றது.