இந்த முன்னெடுப்பின் கீழ், கிராமப்புறப் பெண்களுக்கு வேளாண் பயன்பாட்டிற்காக ஆளில்லா விமானங்களை இயக்குவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெண்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியான அதிகாரமளிப்பு மற்றும் நிதிச் சுயாட்சியை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயிர்க் கண்காணிப்பு, உரங்கள் தெளித்தல் மற்றும் விதைகளை விதைத்தல் போன்ற பணிகளில் உதவுவதற்காக வேண்டி 15,000 பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு (SHGs) வேளாண் பயன்பாட்டிற்கான ஆளில்லா விமானங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பல பெண்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளையும் வழங்கும்.