TNPSC Thervupettagam

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி (NSNOP) முன்னெடுப்பு

January 24 , 2025 30 days 128 0
  • நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி முன்னெடுப்பின் மாவட்ட அளவிலான கூடுகை ஆனது திருச்சியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் போது, ​​பள்ளிக் கல்வித் துறையானது பள்ளிச் சாளரம் எனும் வலைப் பக்கத்தினைத் தொடங்கியுள்ளது.
  • அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கவும், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு பங்களிப்புகளை வழங்குவதற்கு என அவர்களை ஊக்குவிக்கவும் இந்த வலைப்பக்கமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த NSNOP என்ற பெரும் முன்னெடுப்பு ஆனது திருச்சி பிராந்தியத்தினைச் சேர்ந்த 31 நிறுவனங்களிடமிருந்து சுமார் 141 கோடி ரூபாய் மதிப்பில் நிதி உறுதிப்பாடுகளைப் பெற்றுள்ளது.
  • திருச்சி பிராந்தியம் ஆனது திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கியது.
  • சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற சில நிகழ்வுகளுக்குப் பிறகு நடைபெற்ற நான்காவது பிராந்திய வகை கூட்டத்தை இந்தக் கூடுகை குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்