TNPSC Thervupettagam

நரிக் குறவர்களுக்கு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து

September 16 , 2022 804 days 552 0
  • நரிக் குறவர்களை பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்ப்பதற்கான பழங்குடியின அமைச்சகத்தின் முன்மொழிதலுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • தமிழ்நாட்டின் குருவிக் காரன் சமூகமும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணையினைத் திருத்துவதற்கான ஒரு மசோதாவைப் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இது மேற்கொள்ளப் பட உள்ளது.
  • தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் வாழும் மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் சமூகங்களில் நரிக் குறவர் சமூகத்தினரும் உள்ளிடங்குவர்.
  • சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சில பழங்குடியினச் சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் அறிவிப்பதற்கான ஒரு முன்மொழிதலுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் எல்லையைக் கடந்த பகுதியில் சிர்மவுரின் கிரி என்ற பகுதியில் உள்ள ஹட்டி சமூகமும் அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்