TNPSC Thervupettagam

நறுமணப்பொருள் பூங்கா: (Spices park)

August 4 , 2017 2717 days 1085 0
தெலுங்கானா
  • தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் மஞ்சளுக்கான நறுமணப்பொருள் பூங்கா அமைக்கப்படுவதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • இடைத்தரகர்களை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலையினை வழங்குவதற்கும் நறுமணப்பொருள் பூங்காக்கள் அமைக்கப்படுதல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
  • நறுமணப்பொருள் பூங்கா அமைக்கப்படுவதற்கான நிலம் மற்றும் நிதியினை மாநில அரசும் தொழில்நுட்ப உதவியினை இந்திய நறுமணப்பொருள்கள் வாரியமும் வழங்குகிறது.
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நறுமணப்பொருள்கள் வாரியத்தின் தலைமையகம் கொச்சியில் உள்ளது. இந்திய நறுமணப்பொருள்களின் ஏற்றுமதியினை ஊக்குவிக்கவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்