நல்லாட்சி தினம் - டிசம்பர் 25
December 27 , 2022
606 days
303
- இது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளைக் குறிக்கும் நாள் ஆகும்.
- அடல் பிஹாரி வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இன்றைய மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார்.
- இவர் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் (16 நாட்கள்) பிரதமரானார்.
- 1998-1999 ஆம் ஆண்டில், அவர் இரண்டாவது முறையாகப் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதியன்று, அவர் மூன்றாவது முறையாக நம் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- ஐ.நா.வில் இந்தியில் உரையாற்றிய முதல் அரசின் தலைவர் இவரேயாவார்.
- இவருக்கு "பாரத ரத்னா" விருது 2015 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று வழங்கப் பட்டது.
Post Views:
303