இத்தினமானது 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நினைவு கூறுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
அடல் பிஹாரி வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று பிறந்தார்.
இவர் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
இவர் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டில் 13 நாட்களும் இரண்டாவது முறையாக 1998-1999ல் 13 மாதங்களும் பிரதமராகப் பணியாற்றினார்.
மூன்றாவது முறையாக பிரதமராகப் பணியாற்றிய போது, இவர் தனது முழு ஐந்தாண்டு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார். இவர் காங்கிரஸ் கட்சி மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டவராக இல்லாத இந்தியாவின் முதல் பிரதமராக தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், வாஜ்பாய் மற்றும் பண்டித மதன் மோகன் மாளவியா (மரணத்திற்குப் பின்) ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.