TNPSC Thervupettagam

நல் ஆளுகை தினம் - டிசம்பர் 25

December 31 , 2020 1338 days 505 0
  • இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயைக் கௌரவிப்பதற்காக 2014 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளாகும்.
  • 1996 ஆம் ஆண்டில் 13 நாட்கள், பின்னர் 1998 முதல் 1999 வரை 13 மாதங்கள், பின்னர் 1999 முதல் 2004 வரையிலான முழு பதவிக் காலம் என அவர் மூன்று முறை இந்தியப் பிரதமராக பணியாற்றியுள்ளார்
  • பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் முழு பதவிக் காலமும் பணியாற்றிய இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.
  • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று, திரு வாஜ்பாய், மற்றும் பண்டித மதன் மோகன் மாளவியா (இறப்பிற்குப் பின்) ஆகியோர் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • “வாஜ்பாய்: இந்தியாவை மாற்றிய ஆண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வாஜ்பாயின் 96வது பிறந்த நாளன்று வெளியிடப் பட்டது.
  • இது சக்தி சின்ஹா என்பவரால் எழுதப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்