நல் ஆளுகை (Good Governance) மற்றும் சிறந்த நிர்வாக நடைமுறைகளை பிரதிபலித்தல் (Replication of Best Practices) போன்றவற்றின் மீதான இரு நாள் பிராந்திய மாநாடு கவுகாத்தியில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து மாநிலங்களையும் அவற்றின் ஆளுகைச் செயல்பாட்டுகளின் அளவைப் பொறுத்து தரவரிசைப்படுத்திட ஐந்து முக்கிய அளவுருக்கள் உள்ளன என்று மாநிலங்களை தரவரிசைப்படுத்துவதற்கான நல் ஆளுகை குறியீட்டின் மீதான தொழிற்நுட்ப அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
குடிமக்களுக்கான ஆளுகையை (Governance) மேம்படுத்துவதே மாநிலங்களை ஆளுகையின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துவதற்கான நோக்கமாகும்.
இத்தகு தரவரிசை மாநிலங்களுக்கிடையே போட்டித்தன்மையுடைய கூட்டாட்சித்துவத்தை (Competitive Federalism) ஏற்படுத்தும்.
இந்தியா முழுவதும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 150 பங்கேற்பாளர்கள் இந்த இரு நாள் மாநாட்டில் பங்கு பெற்றனர்.