TNPSC Thervupettagam

'நவரத்தின' அறிவிப்புகள்

March 23 , 2023 486 days 314 0
  • காவல்துறையில் பெண்கள் பங்கு பெறத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை (பொன் விழா) தமிழக அரசு கொண்டாடுகிறது.
  • 1973 ஆம் ஆண்டில் 22 படைப் பிரிவினருடன் மகளிர் காவல் படை தொடங்கப்பட்டது.
  • இந்த நாளினை நினைவு கூரும் வகையில் முதல்வர் அவர்கள் அஞ்சல் தலையினை வெளியிட்டு, நவ ரத்தின திட்டங்களையும் அறிவித்தார்.

முக்கியக் கூறுகள்:

  • மகளிர் காவலர்களுக்கான காலை வருகை நேரம் இனி காலை 7 மணிக்குப் பதிலாக 8 மணிகுத் தொடங்கும்.
  • மகளிர் காவலர்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்படும்.
  • மகளிர் காவலர்களுக்கான தனி ஓய்வு அறைகள் அமைக்கப் படும்.
  • மகளிர் காவலர்களுக்கான குழந்தைகள் காப்பகங்கள் சீரமைக்கப் படும்.
  • கலைஞர் காவல் பணிக் கோப்பை என்ற விருதுடன் அங்கீகாரம் வழங்கப் படும்.
  • ஒரு மகளிர் காவலரின் குடும்பக் கடமைகளுக்கு ஏற்ப அவருக்குப் பணி இடமாற்றம் மற்றும் விடுமுறை நாட்கள் வழங்கப்படும்.
  • அனைத்து மகளிர் காவலர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடத்தப்படும்.
  • காவல் துறையில் பெண்கள் என்ற வருடாந்திரத் தேசிய உச்சி மாநாடு நடத்தப்படும்.
  • பணி ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்