March 23 , 2023
615 days
362
- காவல்துறையில் பெண்கள் பங்கு பெறத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை (பொன் விழா) தமிழக அரசு கொண்டாடுகிறது.
- 1973 ஆம் ஆண்டில் 22 படைப் பிரிவினருடன் மகளிர் காவல் படை தொடங்கப்பட்டது.
- இந்த நாளினை நினைவு கூரும் வகையில் முதல்வர் அவர்கள் அஞ்சல் தலையினை வெளியிட்டு, நவ ரத்தின திட்டங்களையும் அறிவித்தார்.
முக்கியக் கூறுகள்:
- மகளிர் காவலர்களுக்கான காலை வருகை நேரம் இனி காலை 7 மணிக்குப் பதிலாக 8 மணிகுத் தொடங்கும்.
- மகளிர் காவலர்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்படும்.
- மகளிர் காவலர்களுக்கான தனி ஓய்வு அறைகள் அமைக்கப் படும்.
- மகளிர் காவலர்களுக்கான குழந்தைகள் காப்பகங்கள் சீரமைக்கப் படும்.
- கலைஞர் காவல் பணிக் கோப்பை என்ற விருதுடன் அங்கீகாரம் வழங்கப் படும்.
- ஒரு மகளிர் காவலரின் குடும்பக் கடமைகளுக்கு ஏற்ப அவருக்குப் பணி இடமாற்றம் மற்றும் விடுமுறை நாட்கள் வழங்கப்படும்.
- அனைத்து மகளிர் காவலர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடத்தப்படும்.
- காவல் துறையில் பெண்கள் என்ற வருடாந்திரத் தேசிய உச்சி மாநாடு நடத்தப்படும்.
- பணி ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
Post Views:
362