நவேகான் நக்சிரா புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள ஒரு புலியானது சமீபத்தில் நான்கு குட்டிகளை ஈன்றது.
இது மகாராஷ்டிராவின் கோண்டியா மற்றும் ஷந்தாரா மாவட்டங்களில் அமைந்து உள்ளது.
இது 1970 ஆம் ஆண்டில் வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், மாநில அரசானது புலிகள் வளங்காப்புத் திட்டத்தில் சேர்ப்பதற்காக இந்தச் சரணாலயத்தினை மற்றொரு தேசியப் பூங்காவுடன் இணைக்கச் செய்வதாக அறிவித்தது.
தற்போது இது நக்சிரா நவேகோன் புலிகள் வளங்காப்பகம் என்று அழைக்கப் படுகிறது.
இது பென்ச், கன்ஹா, தடோபா அந்தாரி புலிகள் வளங்காப்பகம், இந்திராவதி புலிகள் வளங் காப்பகம் போன்ற பல புலிகள் காப்பகங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது.