TNPSC Thervupettagam

நாகரிகங்கள் பற்றிய உரையாடல் (Dialogue of Civilization - IV)

October 11 , 2017 2473 days 827 0
  • நாகரிகங்கள் பற்றிய உரையாடல் (Dialogue of Civilization - IV) எனும் நான்காவது சர்வதேச மாநாடு மத்திய கலாச்சார துறை அமைச்சகத்தால் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • இந்திய தொல்பொருள் கணக்கெடுப்பு (ASI – Archaeological Survey of India) நிறுவனம், மத்திய கலாச்சார அமைச்சகம், மற்றும் தேசிய புவியியல் சங்கம் (National Geographic Survey) ஆகியவற்றின் கூட்டிணைவுடன் டெல்லி, காந்திநகர் மற்றும் தோலவிராவில் அக்டோபர் 8 முதல் 15 ஆம் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது.
  • இம்மாநாட்டின் நோக்கம் உலகின் ஐந்து பண்டைய நாகரிகங்களைப் பற்றி கற்றறிந்த தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது ஆகும் . அந்த ஐந்து நாகரிகங்கள்,
    • எகிப்து
    • மெசபடோமியா
    • தெற்கு ஆசியா
    • சீனா
    • மெசோ அமெரிக்கா
  • இம்மாநாடு 2013-ல் தேசிய புவியியற் சங்கத்தால் தொடங்கப்பட்டது.
  • தற்போதைய இந்த மாநாடு நாகரிகங்கள் பற்றிய உரையாடலின் நான்காவது பதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்